ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதிகள் முழுவதும் ஒரு அங்குலம் கூட விடாமல் சீல் வைக்கப்படும் என்று ஜம்மு டிஜிபி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நேற்று பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்து வருவதால் சர்வதேச எல்லை பகுதிகள் முழுவதும் ஒரு அங்குலம் கூட இடம் விடாமல் சீல் வைக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் இடங்களில் உள்ளூர் இளைஞர்கள் குழு அமைத்து ராணுவத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜம்முவில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகள் இல்லாத நிலையில், தற்போது சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், அதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.