புதுடெல்லி: பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வியூகங்களை வகுத்த தேர்தல் மன்னன் பிரசாந்த் கிஷோர், மக்கள் ஆட்சி அமைக்க புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
தலைநகர் பாட்னாவில் ஜன் சூரஜ் அபியான் அமைப்பின் நிர்வாகிகளிடம் பேசிய அவர் கூறியதாவது: புதிய கட்சி அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்படும். புதிய கட்சி வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றார்.
கட்சி எந்த ஒரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை என்றார். இது பீகார் மக்களின் கூட்டு முயற்சியாக இருக்கும்.
புதிய கட்சியின் நிர்வாகிகளாக 1.5 லட்சம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்றார். அவர் கட்சியை வழிநடத்த மாட்டார் என்றும் தலைவர்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கட்சியின் தலைமை ஐந்து சமூக குழுக்களிடையே விநியோகிக்கப்படும் என்றும் கிஷோர் கூறினார், பொதுப்பிரிவில் இருந்து ஒரு தலைவர் ஓராண்டும், ஓபிசியில் இருந்து ஒருவர் மற்றொரு ஆண்டும் பணியாற்றுவார்.
இதன் பின், 8 இடங்களில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன், மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.