இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி தங்கம் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. விலை மேலும் உயர்ந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ₹9,400 ஆக உள்ளது. ஒரு சவரன் ₹75,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹7,760 ஆகவும், ஒரு சவரன் ₹62,080 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹127 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ₹1,27,000 ஆகவும் விற்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு கிராம தங்கம் ₹10,000 ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.
இந்த தங்கம் விலை உயர்வால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் நகை ஆர்வலர்கள் இடையே வர்த்தக நிலவரம் மாறிவருகிறது.