புதுடில்லியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததையடுத்து, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 08) அவசர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை அழைத்துள்ளார்.

இந்த வரி விதிப்புக்கு பின்னால், இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையேயான எண்ணெய் வர்த்தகமே காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்கா மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்துக்கு எதிரான தாக்கங்கள் உருவாகலாம் என அரசு கவலை கொண்டுள்ளது. இதனால், பிரதமரின் தலைமையில் அமைச்சர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
அமெரிக்காவை சமாளிக்க மற்றும் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்திய விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட முக்கிய சமூகங்களின் நலனில் எந்தவொரு சமரசமும் செய்யமாட்டோம் என்பது பிரதமர் மோடியின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.
இந்த மோதல் தொடர்ந்து அதிகரிக்கும் முன், இருநாடுகளும் விவகாரத்தை பேச்சுவார்த்தையில் தீர்க்க முயலவேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, டிரம்ப் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தக ஒப்பந்த பேச்சுகளையும் மேற்கொள்ள விருப்பமில்லை எனக் கூறிய நிலையில், இன்று நடைபெறும் இந்த கூட்டம் மிக முக்கிய turning point ஆக இருக்கலாம்.