பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆசிப் கவாஜா வெளியிட்ட பக்கத்தாக்கிய குற்றச்சாட்டுகள் அரசியல் மட்டுமின்றி நிர்வாகத்திலும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளன. உயர் அதிகாரிகள் பலர் போர்ச்சுக்கல் நாட்டில் குடியுரிமை பெற முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரிகள் பெரும் அளவில் கருப்பு பணத்தை வெளிநாட்டில் சொத்துகளாக மாற்றியிருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரிகளில் ஒருவர், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உஸ்மான் புஸ்தாருக்கு நெருக்கமானவர் என கூறப்பட்டுள்ள நிலையில், அவரது மகளின் திருமணத்தில் மட்டும் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் ஆசிப் கவாஜா தெரிவித்தார். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய செயல்கள் பாகிஸ்தானின் நம்பிக்கையை சிதைத்துள்ளன என்றும், அதிகாரிகள் வெளிநாட்டு குடியுரிமையோ அல்லது சொத்துக்களையோ பெறும் முயற்சியில் இருப்பது வெட்கக்கேடானது என்றும் கவாஜா கருத்து தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தேர்தல் காரணமாக வெளிநாட்டில் குடியுரிமை பெற முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் உயர் நிர்வாகம் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருவதால், எதிர்காலத்தில் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பல மாற்றங்களை இது உருவாக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.