தற்போது இந்தியாவில் 100 ரூபாயில் கூட தேவையான பொருட்களை வாங்க இயலவில்லை. நாணயத்தின் மதிப்பு குறைவதற்கேற்ப, நமக்கு கையில் பணம் இருந்தாலும், அது போதாத அளவுக்கு செலவாகிறது. ஆனால், ஒரு நாட்டில், இந்திய ரூ.1க்கு ரூ.500 பெற முடிகிறது என்றால் அது உண்மையா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இந்த நாட்டுடன் இந்தியாவுக்கு பழமையான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளன.

அந்த நாடு தான் ஈரான். ஈரானின் அதிகாரப்பூர்வ நாணயம் ரியால். இந்திய ரூ.1க்கு 480.54 ரியால் பெறலாம். இதன் பொருள், 10,000 ரூபாயுடன் ஒருவர் ஈரானுக்குச் சென்றால், அங்கு வசதியான ஹோட்டலில் தங்கி, நல்ல மதிய உணவுடன் சுற்றுலா அனுபவிக்க முடியும். ரியால் என்பது 1798ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பழமையான நாணயம். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அதன் மதிப்பு பலமடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரானின் தற்போதைய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் எண்ணெய் வளத்தால் செழித்து இருந்தாலும், தற்போதைய சர்வதேச பொருளாதாரப் பற்றாக்குறையும், அரசியல் தடைகளும் நாட்டை பாதித்திருக்கின்றன. இதனால் தான் இந்திய நாணயத்திற்கு அங்கு அதிக மதிப்பு கிடைக்கிறது. ஆனால் இது நம்முடைய நாணய மதிப்பு உயர்ந்தது என்று பொருள் கொள்ளக்கூடாது, மாறாக அந்த நாட்டின் நிலைமையே மிகவும் பாதிக்கப்பட்டது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
இந்திய ரூபாய்க்கு வேறு நாடுகளில் ஏற்படும் மதிப்பீடு என்பது அந்நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தது. ஈரானில் ஒரு நாளைக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கும் வாடகைக்கூட வெறும் 7,000 ரூபாய் மட்டுமே தேவையாகும். இது நாம் ஏன் நமது நாணயத்தின் பெறுமதியை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், சர்வதேச சந்தை சூழ்நிலையை புரிந்து கொள்வதையும் வலியுறுத்துகிறது.