கடந்த வெள்ளியன்று பங்குச் சந்தை பெரும் ஏற்றம் கண்டதையும், சென்செக்ஸ் 1200 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் ஈட்டியதையும் ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயர்ந்து 81 ஆயிரத்து 676 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 922 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேபிடல், கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் தங்கம் உள்ளிட்ட பங்குகள் ஏற்றமும், சிப்லா, ஐடிசி, ஏசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன.
வரும் காலங்களில் பங்குச் சந்தை ஏற்றம் பெறும் என்றும், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆனால் அதே சமயம் பங்குச் சந்தையில் புதிதாக வருபவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.