பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இயக்குனர் ஷங்கரின் வழியைத் தொடராமல், திரைப்பாதையில் கதாநாயகனாக பயணத்தைத் தொடங்கவிருக்கும் அர்ஜித், தற்போதைக்கு ஏ.ஆர். முருகதாஸின் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
அர்ஜித் முதன்முறையாக நடிக்கவுள்ள இப்படத்தை அட்லியின் உதவியாளராக இருந்த சிவா இயக்குகிறார். இந்த படம் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிறது. ஹீரோயினாக தற்போது மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் மமிதா பைஜு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘பிரேமலு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிய இடம் பிடித்த மமிதா, தற்போது தமிழிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார். விஜய்யின் ‘ஜனநாயகன்’, ரஜ். பாலாஜியின் ‘கருப்பு’, சூர்யாவின் அடுத்த படம், தனுஷ் மற்றும் விஷ்ணு விஷால் படங்களில் நடித்து வருகிறார்.
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஷங்கர் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் நிகழ்வை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 3’ கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வருகின்றது. அதனைத் தொடர்ந்து அவரது கனவுப் படம் ‘வேள்பாரி’யையும் படமாக்க உள்ளார்.
இனி வரும் காலங்களில் தனது மகனை வைத்து ஷங்கர் இயக்கும் வாய்ப்பும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.