மெக்சிகோ சிட்டி: சமீப காலங்களில் உலகின் பல பகுதிகளில் ஏற்பட்டுவரும் நிலநடுக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தைக் கிளப்பி வருகின்றன. இன்று, மெக்சிகோவின் ஓக்ஸாகா கடற்கரைப் பகுதியை ஒட்டி, காலை நேரத்தில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட இந்த அதிர்வால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியில் பாய்ந்தனர். சில கட்டிடங்களில் சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் பெரும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூகம்ப மையம் கடற்கரைப் பகுதியில் இருந்ததால், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருப்பினும், பிந்தைய அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் அடிக்கடி ஏற்படும் இந்த இயற்கை அதிர்வுகள், காலநிலை மாற்றம் மற்றும் புவி உள்மண்டல மாற்றங்கள் குறித்து நிபுணர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.