நம் வாழ்க்கையில் வங்கிக் கணக்கு மிகவும் அவசியமானது. அதில் சம்பளக் கணக்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இது ஊழியர்களின் மாத சம்பளத்தை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு கணக்கு. சம்பளம் மாதந்தோறும் இந்தக் கணக்கில் செலுத்தப்படும்.

அதிலிருந்து பணத்தை எடுப்பதோ, பரிமாற்றமோ எளிதில் செய்யலாம். இது சாதாரண சேமிப்பு கணக்காக மட்டும் இல்லாமல் பல சலுகைகளை வழங்குகிறது. சில வங்கிகள் விபத்து காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகின்றன. தனிநபர் கடன் அல்லது வீட்டுக் கடனில் வட்டி சலுகைகள் கிடைக்கும். ஓவர்டிராஃப்ட் வசதி மூலம் பேலன்ஸ் இல்லாவிட்டாலும் அவசரத் தேவைக்கு பணம் எடுக்கலாம்.
பல வங்கிகள் இலவச கிரெடிட் கார்டுகளையும் கவர்ச்சிகரமான சலுகைகளையும் தருகின்றன. ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் உணவகங்களில் தள்ளுபடிகள், கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும். NEFT, RTGS போன்ற பரிமாற்றங்கள் பெரும்பாலும் இலவசம். இலவச காசோலை புத்தகம், டெபிட் கார்டு போன்ற சேவைகள் வழங்கப்படும்.
மாதந்தோறும் இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் கிடைக்கும். பூஜ்ஜிய இருப்பு வசதியால் குறைந்தபட்ச பேலன்ஸ் பராமரிக்க தேவையில்லை. வங்கிக்கு வங்கி நன்மைகள் மாறுபடும். எனவே சம்பளக் கணக்கு திறக்கும் முன் அதன் சலுகைகளை ஆராய்வது அவசியம். சரியான வங்கியைத் தேர்வு செய்தால் நிதி மேலாண்மை எளிதாகும். சம்பளக் கணக்கு என்பது வசதியும் பாதுகாப்பும் தரும் ஒரு முக்கிய கருவி.