ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். அண்மையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம். கடந்த ஆண்டு மலிவு விலையில் JioBharat V2 போனை வெறும் 999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது. தற்போது ஜியோ ஒரு சிறந்த சலுகையை கொண்டு வந்துள்ளது. இது பல மொபைல் பயனர்களுக்கு இன்னும் தெரியாது.
4ஜி ஃபீச்சர் போனுக்கு புதிய ப்ரீபெய்ட் பேக்கைக் கொண்டு வந்துள்ளது. 5G டேட்டா, OTT சந்தாக்கள் மற்றும் மலிவான போன்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களிடையே மிகவும் விருப்பமான சேவை வழங்குநராக ஜியோ உள்ளது. மற்ற திட்டங்களைப் போலவே, ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் அறிமுகப்படுத்திய மலிவான திட்டமும் ஆச்சரியமாக இருக்கிறது இந்த ஆஃபரில் OTT சந்தாவுடன் வரம்பற்ற அழைப்புகளுடன் 42 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
அன்லிமிடெட் அழைப்புகள், 42 ஜிபி டேட்டா திட்டத்தை பற்றி தெரிந்த வாடிக்கையாளர்கள், மற்றொரு மொபைல் சேவை வழங்குநரான ஏர்டெல்லை விட சிறந்ததாக கூறுகின்றனர். ஜியோ கொண்டு வந்திருக்கும் புதிய திட்டத்தின் விலை 299 ரூபாய். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவர். நிறைய டேட்டா உடன் அன்லிமிடெட் கால்களும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் மொத்தம் 42 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள்.
அதாவது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா உடன், 100 எஸ்எம்எஸ் வாய்ப்புகளைப் பெறுவார்கள் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றையும் பெறுவீர்கள். வழக்கமான டேட்டா ஒதுக்கீடு முடிந்ததும், வாடிக்கையாளர் 64kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பு, இந்த திட்டத்தில் ஜியோ சினிமா பிரீமியம் சேர்க்கப்படவில்லை. அது தேவையெனில் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ அன்லிமிடெட் 5G உடன் ரூ.349 திட்டத்தை கொண்டுள்ளது. இது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் விட அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.