திருச்செங்கோடு: சைபர் செக்யூரிட்டி மாநாடு… திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் நேஷனல் சைபர் செக்யூரிட்டி ரிசர்ச் கவுன்சில் சார்பில், ‘தேசிய சைபர் செக்யூரிட்டி’ உச்சி மாநாடு துவக்க விழா நடந்தது.
நிர்வாக இயக்குனர் மோகன் தலைமை வகித்தார். கல்-லுாரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். நேஷனல் சைபர் செக்யூரிட்டி ரிசர்ச் கவுன்சில் துணைத்தலைவர் காளிராஜ், மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்திய மோட்டார் வாகன சட்டப்படி, 95 சதவீத மக்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. இன்று, ‘சைபர் கிரைம்’ குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. பொதுமக்கள், தேவையில்லாத போன் கால்களை தவிர்க்க வேண்டும். அதேபோல், தேவையற்ற, ‘லிங்கு’களை கிளிக் செய்யக்கூடாது.
இதனை தடுக்க, இன்ஜி., மாணவர்கள் இண்டர்ன்ஷிப்பிற்காக சைபர் கிரைம் டிவிசனுக்கு வரலாம். அவர்களுக்கு சார்டிபிகேட் வழங்கப்படும். மொபைல் திருட்டை சிலர் சாதாரணமாக நினைக்-கின்றனர். ஆனால், குற்றவாளிகள், திருட்டு மொபைல் போன்-களை பயன்படுத்தும் போது, அதன் உரிமையாளர்கள் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். எனவே, மொபைல் போன் திருடு போனால், ‘1930’ என்ற எண்ணிற்கோ அல்லது www.ceir.gov.in என்ற இணையதளத்திலோ புகார் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.