இன்று ஓடிடியில் புதுப் படங்களும் வெப் தொடர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ‘ஜேஎஸ்கே ஜானகி v/s ஸ்டேட் ஆப் கேரளா’ திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது. பிரவீன் நாராயணன் எழுதி இயக்கிய இந்த படத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயகிக்கு நீதி பெற்றுத் தரும் வழக்கறிஞராக சுரேஷ் கோபியும், ஜானகி வேடத்தில் அனுபமா பரமேஸ்வரனும் சிறப்பாக நடித்துள்ளனர். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் இன்று முதல் ஓடிடியில் பார்க்கலாம்.

‘யாதும் அறியான்’ எனும் உளவியல் திரில்லர் திரைப்படம், அப்பு குட்டி, தம்பி ராமையா, தினேஷ் உள்ளிட்டோர் நடித்த படமாகும். எம். கோபி இயக்கிய இந்த படம் தார்ம பிரகாஷ் இசையமைப்பில் கடந்த ஜூலை 18 அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இன்று முதல் சிம்பிளி சவுத் மற்றும் ஆஹா தமிழ் தளங்களில் கிடைக்கிறது.
‘குட் டே’ திரைப்படம் அரவிந்தன் இயக்கத்தில், பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 27 அன்று வெளியாகிய இப்படம் இன்று சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், ‘அந்தேரா’ எனும் வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. பிரியா பாபட், கரண்வீர் மல்ஹோத்ரா, பிரஜக்தா கோலி, சுர்வீன் சாவ்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடர் மர்மம், துரோகம் மற்றும் மன அழுத்தம் போன்ற கூறுகளை மையமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு எபிசோடும் புதுப் புதுக் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.