காசாவில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவுப்பஞ்சத்தை தீர்க்க சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வான்வழியாக உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால் இந்த உதவியை கூட ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தாக்குதல்களுக்கு மேலாக உணவுப் பஞ்சமும் தீவிரமடைந்து, பசியால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகள், தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் வான்வழி உணவுப் பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் பாறாசூட் உதவியுடன் உணவுப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கியுள்ளன.
ஆனால், இந்த உணவுப் பொருட்கள் தங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களின் அவசர தேவையை புறக்கணிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று கண்டித்துள்ளன.
மேலும், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க உலக நாடுகள் முன்வந்ததன் காரணமாகவே காசா மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உணவு உதவி நிறுத்தப்பட்டால் காசா மக்களின் நிலைமை மிக மோசமடையும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், உலக அரசியல் வட்டாரங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய்ந்து வருகின்றன. காசா மக்களின் உயிர்வாழ்விற்காக சர்வதேச மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு அமைப்புகளிடமிருந்து வலியுறுத்தப்படுகிறது.