சென்னை : மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் உடலுக்கு பிரதமர் மோடி வர இயலாத காரணத்திற்காக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடலுக்கு அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடி அலுவல் காரணமாக நேரில் வர முடியாததால் மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் தமிழக முதல்வர் .ஸ்டாலின், மீண்டும் நேரில் அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.
பாஜக – திமுக இடையே அரசியல் ரீதியாக மாற்று கருத்து இருந்தாலும், தமிழக அரசின் இந்த செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.