சென்னை: வாக்குச் சாவடிகளில் பெண்கள் வாக்களிக்கும் போது சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து எழுந்த விவாதத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையான பதில் அளித்துள்ளார்.

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்னிட்டு, “பெண்கள் வாக்களிக்கும் சிசிடிவி வீடியோக்களை பகிர வேண்டுமா?” என்ற கேள்வியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எழுப்பியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாக பிரகாஷ் ராஜ், “நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச் சாவடி என்பது உடை மாற்றும் அறை அல்ல. உங்களின் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவையில்லை. வெளிப்படைத்தன்மையே தேவை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பிரகாஷ் ராஜ் வெளிப்படுத்திய நிலைப்பாடு, வாக்காளர் தனியுரிமை மற்றும் தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத் தன்மை குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.