சென்னை: இந்தியாவில் முதல் முறையாக, அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் ஒரே தளத்தில் இணைக்கும் முழுமையான டிக்கெட் செயலி சென்னையில் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய வசதி சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) மூலம் வெளியிடப்படுகிறது.

இந்த செயலி மூலம் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகள் (MTC), “நம்ம யாத்ரி” ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் ஆகியவற்றின் சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பயணிகள் இச்செயலியின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளுக்கும் ஒரே இடத்தில் டிக்கெட் பெறும் வசதியை அனுபவிக்கலாம்.
புதிய முயற்சியால் பயணிகளுக்கு நேரச் சேமிப்பும், சிரமமற்ற டிக்கெட் பதிவு முறையும் கிடைக்கும். மேலும் போக்குவரத்து துறையில் ஒருங்கிணைந்த மேலாண்மை மூலம் சேவைகளின் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பொதுப் போக்குவரத்து துறையில் பெரிய முன்னேற்றமாக கருதப்படும் இச்செயலி, சென்னையை மையமாக கொண்டு பிற நகரங்களிலும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.