ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் 5 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் இந்திய இளைஞர் சவுரவ் ஆனந்த் தனது கையை இழந்தார். கடந்த மாதம் அல்டோனா மீடோவில் உள்ள ஷாப்பிங் மையத்தில் அரிவாளால் தாக்கப்பட்டதால் அவர் பெரும் காயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

சவுரவ் ஆனந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அவருடைய விசா காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், மருத்துவ சிகிச்சை மற்றும் வழக்கு தொடர்பான செயல்முறைகளை மேற்கொள்வதற்காக, அவரது விசா மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுரவ் ஆனந்த் தெரிவித்தபோது, “என் வாழ்க்கையின் மிகக் கடினமான நேரத்தில் ஆஸ்திரேலிய அரசும் சமூகமும் எனக்கு ஆதரவாக நின்றனர். இது எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது” என்றார்.