சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 17ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 18) காலை 8 மணிக்கு தொடங்கியது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று முடிந்தது.

இந்த தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் முன்பதிவில் ஆர்வமாக இருந்தனர். அக்டோபர் 18, 19, 20 தேதிகளுக்கான முன்பதிவு அடுத்த நாள்களில் தொடங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலம் பதிவு செய்யலாம்.