சீனா: சீனாவில் 4 ஆண்டுகளில் 20-வது முறையாக ஸ்பேஸ்சூட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீனாவின் டியாங்காங் விண்வெளி ஆய்வு மையத்துக்கு வெளியே சென் டோங் என்ற வீரர், 20-ஆவது முறையாக விண்வெளி பி உடையை அணிந்து பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டதாக சீன விண்வெளி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
விண்வெளி ஆய்வில் ஈடுபடும் வீரர்களுக்கான ஸ்பேஸ்சூட் உடையை அதிக முறை பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி சீனா ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
வழக்கமாக, விண்வெளி உடைகள் 15 முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்குள் விண்வெளி பி (B) உடை 20-வது முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.