நாக்பூர்: அக்டோபர் 2-ம் தேதி நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விஜயதசமி கொண்டாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
அக்டோபர் 2-ம் தேதி காலை 7.40 மணிக்கு நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் விஜயதசமி கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று அமைப்பின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குவார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கொண்டாட்டங்களில் சிறப்பு உரையாற்றுவார்.
இந்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு விழாவுடன் இணைந்து விஜயதசமி கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.