புவனேஸ்வர்: ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். போர்க்காலங்களில் எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் முறியடிக்க வான் பாதுகாப்பு கவசம் முக்கியமானது.

இந்தியாவுக்கான பிரத்யேக வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்க டி.ஆர்.டி.ஓ., பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முயற்சி செய்துள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கிய வான் பாதுகாப்பு கவசத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஒடிசா சந்திப்பூர் கடற்கரையிலிருந்து ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் திறனை வெற்றிகரமாக சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. டி.ஆர்.டி.ஓ, ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.
இந்த சோதனை நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனையும் வெளிப்படுத்துகிறது. எதிரி ட்ரோன்களின் அச்சுறுத்தலை முறியடிக்க பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இது உதவும்.
இந்த சாதனை இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் திறன் மற்றும் முன்னேற்றத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வு. இந்தியா வான் பாதுகாப்பில் முன்னணி நாடாக தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் உள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்பின் வெற்றி இந்தியாவின் ராணுவ நுட்பத்திறன், டி.ஆர்.டி.ஓ. மற்றும் பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைந்த முயற்சியின் உண்மையான வெளிப்பாடாகும். எதிரி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும்.
இந்த சாதனை இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் பலத்தத்தை வெளிப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகும். இது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டின் ராணுவ திறனை மேம்படுத்தவும் உதவும்.