சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்ற நிலையில், அங்கு திரண்ட கூட்டம் விஜய்க்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தன்னைப் பற்றியே விவாதித்து வருவதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகள் பிரசாரத்தை துவங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சியை தொடங்கிய விஜய் இதுவரை சில பொது நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டார். இப்போது வரவிருக்கும் தேர்தலை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் தனது களப் பயணத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே மதுரை மாநாடு நடத்தப்பட்டது. வட மாவட்டத்தில் முதல் மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து தென் மாவட்டத்தில் மாநாடு நடத்துவது விஜயின் திட்டமாகும். மதுரை மாநாடுகள் அரசியல் வரலாற்றில் ஆட்சிமாற்றத்திற்கு வழிவகுத்தவை என்ற எண்ணமே விஜயை அந்த இடத்தைத் தேர்வு செய்யச் செய்தது.
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்ற இந்த மாநாடு மிகப் பிரம்மாண்டமாக அமைந்தது. கட்சித் தலைவர்கள் தெரிவித்தபடி சுமார் 15 லட்சம் பேர் திரண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாநாட்டை விட விஜயின் உரையே தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினை “அங்கிள்” என்று விமர்சித்ததும், பிரதமர் நரேந்திர மோடியை குறித்த கருத்துகளும், அதிமுக மீது கூறிய பேச்சும் அரசியல் பரபரப்பை தூண்டியுள்ளது. இந்த உரை விஜயின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.