மும்பை: பாலிவுட் நடிகை தன்னிஷ்டா சாட்டர்ஜி (44), கடந்த எட்டு மாதங்களாக 4ஆம் நிலை ஆலிகோமெட்டாஸ்டேடிக் வகை புற்றுநோயுடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தன்னிஷ்டா மொட்டை தலையுடன் அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘புற்றுநோயால் என் தந்தையை இழந்தது போதாது என்பது போல நானும் இப்போது போராடி வருகிறேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தனது 70 வயது தாயையும், 9 வயது மகளையும் பராமரிக்கும் பொறுப்பு பெரிய சுமை என கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தங்கள் வேதனையை கமெண்டாக பதிவு செய்து வருகின்றனர்.