ராமேஸ்வரம்: கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்.
அப்போது, மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் நடிகர் விஜய் கச்சத்தீவின் உரிமைகள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளித்த விஜித ஹேரத், “கச்சத்தீவை இந்தியாவிற்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தென்னிந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இந்த விவகாரம் அன்றிலிருந்து பல்வேறு மக்களால் தேர்தல் மேடைகளில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அரசியல் கருத்துக்களுக்கு கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.”