திருத்தணி: திருத்தணி அருகே 5 மாத கருவைக் கலைத்ததால் 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஆந்திர பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி அருகே 5 மாத கருவைக் கலைத்ததால் 17 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் தவறான நாட்டு மருந்து கொடுத்து கருவைக் கலைத்த ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணையும் சிறுமியின் சகோதரனையும் போலீசார் கைது செய்தனர்.
அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடனான பழக்கத்தால் சிறுமி கர்ப்பமானதாகக் கூறப்படும் நிலையில், சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுவன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் நிலையில், சிறுமி குடும்பத்தினர் ரகசியமாக ஆந்திரா சென்று அங்கீகரிக்கப்படாத நாட்டு மருந்தைக் கொடுத்து கருவைக் கலைத்ததால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.