சென்னை: கத்தி படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து வித்தியாசமான படத்தை இயக்க நினைத்தேன் என்று ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி கோயம்பத்தூர், கொச்சி, ஐதராபாத் என பல இடங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கூறியதாவது ” நான் கத்தி திரைப்படத்திற்கு பிறகு விஜய் சாரை யாரும் பார்க்காத ஒரு தோற்றத்தில் திரைப்படம் இயக்க நினைத்தேன். ஒரு இலங்கை அகதி ஊர் ஊராக தப்பித்து தப்பித்து செல்கிறான் போன்ற ஒன் லைன் அது முதலில் விஜய் ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு அரசியல் ரீதியாக ஒரு கதைக்களம் ரெடி பண்ணுங்க என கூறினார். அப்படி தான் சர்கார் திரைப்படம் உருவானது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.