புதுடில்லி: ‘இளைஞர்களை இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்’ என, 35 வயதான ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சட்டா கூறினார். லோக்சபா எம்.பி.க்கு குறைந்தபட்ச வயது 25, ராஜ்யசபா எம்.பி.க்கு 30.
இது குறித்து ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சட்டா கூறியதாவது: இந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25ல் இருந்து 21 ஆக குறைக்க வேண்டும். . மக்கள் 18 வயதில் வாக்களித்து புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க முடியும் என்றால், அவர்களும் 21 வயதில் தேர்தலில் போட்டியிடலாம்.
ஒரு இளம் நாடு
நமது நாடு இளைய நாடுகளில் ஒன்று. நாம் பழைய அரசியல்வாதிகளைக் கொண்ட இளம் நாடு. மாறாக இளம் அரசியல்வாதிகளின் நாடாக நாம் மாற வேண்டும். இதற்கு இளைஞர்களை இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.