புதுடெல்லி: கேரளா மற்றும் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கேரளாவில் கனமழையால் வயநாடு மாவட்டம் சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 291 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவம், விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறங்கி, மண்ணில் புதைக்கப்பட்ட இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் இரண்டு தனியார் சொகுசு விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை படையினர் மீட்டுள்ளனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்த படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த படங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.