சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) 15வது பதிப்பு “புட்ப்ரோ 2024” சென்னை வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
புளூ ஸ்டார் நிறுவன நிர்வாக இயக்குனர் பி.தியாகராஜன் கூறியதாவது: இந்திய தொழில் கூட்டமைப்பு, 15வது ஆண்டாக, “புட்ப்ரோ2024′ கண்காட்சியை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கண்காட்சியில் உணவு பதப்படுத்தும் துறையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கண்காட்சிக்கு 25,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பதப்படுத்துதல் மற்றும் மெலிந்த தொழில்களுக்கான பரந்த அளவிலான வாய்ப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி கண்காட்சி விவாதிக்கும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.