ராஞ்சி: உத்தரபிரதேசத்திலிருந்து ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் உள்ள நவடா கிராமத்திற்கு பெரிய கண்டெய்னர் லாரிகளில் பசுக்கள் கடத்தப்படுவதாக விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள ஆர்வலர்கள் கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையில், நவடா கிராமத்திலிருந்து பசுக்கள் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. விஎச்பி மற்றும் பஜ்ரங் தள ஆர்வலர்கள் அங்கு விரைந்து சென்று பசுக்களைப் பிடித்தனர்.

அங்கு மோதலில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர்கள் சுமார் 200 பசுக்களை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.
2 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் பசுக்களை பலமு நகரில் உள்ள மையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.