புதுடில்லி: பாரபட்சமின்றி பேரிடர் மேலாண்மை நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார்.
கேரளா வயநாட்டில் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை 308 பேர் உயிரிழந்தனர். டில்லி, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில்,பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என கார்கே வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: காலநிலை மாற்றம் காரணமாக, நிலச்சரிவு, மேகவெடிப்பு , கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி பேரிடர் மேலாண்மை நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.