புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சியை கண்டு பயம் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறு வரி விதிப்பு செய்துள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாததால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது.
50 சதவீதம் வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-
இந்தியா வலிமையாக வளர்ந்தால் தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள். இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது. அநீதியானது. எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது. இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.