வயநாடு: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகளை பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக ஜூலை 30ம் தேதி வயநாடு சென்ற மத்திய அமைச்சர் குரியன் தெரிவித்தார். இதன் மூலம் வயநாடு பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என செல்வ பெருந்தகை கூறியது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை மற்றும் சூரல் மலைகளில் இரண்டு நிலச்சரிவுகளில் குறைந்தது 295 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஜூலை 30ஆம் தேதி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநிலத்திற்கு வழங்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்றார். முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நிலச்சரிவு பாதித்த பகுதிகளை ஒரு மத்திய அமைச்சர் கூட பார்வையிடவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதன் எதிரொலியாக ஜூலை 30-ம் தேதி மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் வருகை குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் செல்வ பெருந்தகையின் கருத்து பொய்யானது என நிரூபணமாகியுள்ளது.