சென்னை சினிமா வட்டாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஜாய் தனது கர்ப்பிணித் தகவலையும் திருமண புகைப்படத்தையும் வெளியிட்டதன் பின்னர், ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதி ப்ரியாவிடம் இருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்தது. இதனால் ஜாய், தன்னை ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையாக பேசப்பட்டு வரும் நிலையில், ஜாய் கிரிஸில்டா ரங்கராஜுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் அளித்த வீடியோவும் வைரலானது. அதில் ரங்கராஜ், “பல ஜென்மம் தாண்டிய உறவு” என தனது காதலை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் யூடியூபர் சிவசங்கரி, “ஸ்ருதி பிரியா ஏன் மௌனமாக இருக்கிறார்? யாரை காப்பாற்றுவதற்காக அவர் பேசாமல் இருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
சமூகத்தில் பெரும்பாலானவர்கள் ஜாய் செய்ததே தவறு என்று குற்றம் சாட்டுகின்றனர். “முதல் மனைவி இருக்கும்போது அவர் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்?” என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் ஜாய், தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தான் ரங்கராஜை திருமணம் செய்ததாக கூறுகிறார். அதேசமயம், ரங்கராஜ் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாத நிலையில், இரண்டாவது திருமணம் நடந்ததா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
இந்த விவகாரத்தில் பெண் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், ஆண் மீது சமூகமே கேள்வி கேட்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜாய் தற்போது கர்ப்பிணியாக இருந்து தனது குழந்தைக்கான அங்கீகாரத்திற்காக போராடி வருவதாகவும், ரங்கராஜ் மற்றும் ஸ்ருதி ப்ரியா மௌனமாக இருப்பது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குவதாகவும் சிவசங்கரி கருத்து தெரிவித்துள்ளார்.