கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு, இந்தியாவின் ஐடி தலைநகரம் மற்றும் ஸ்டார்ட்-அப்களின் மையம் என போற்றப்படும் நகரம். இந்நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால், ரியல் எஸ்டேட் துறை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நிலத்தின் மதிப்பு ஏற்கனவே அதிகமாக இருந்தாலும், புதிய திட்டங்கள் காரணமாக இன்னும் உயர்ந்த நிலையை எட்டும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக மூன்று முக்கிய தொழில் வழித்தடங்கள் – சென்னை-பெங்களூரு (CBIC), பெங்களூரு-மும்பை (BMIC), ஹைதராபாத்-பெங்களூரு (HBIC) – உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை மூலமாக முக்கிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரம் குறையும். அதோடு, தொழிற்சாலைகள், கிடங்குகள், வர்த்தக மையங்கள், தொழில்பூங்காக்கள் என புதிய தொழில்துறை வளர்ச்சி காத்திருக்கிறது.
சென்னை-பெங்களூரு வழித்தடம் மூலம், குர்னூல், துமகுரு, ஓஸ்கோடே போன்ற பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும். மும்பை வழித்தடம் பெங்களூருவின் மேற்குப் பகுதிகளை வளர்ச்சி பாதையில் நிறுத்தும். ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடம், வடக்கு மாவட்டங்களில் புதிய தொழில் முதலீடுகளுக்கு வாய்ப்பைத் திறக்கும்.
இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, மக்கள் குடியேற்றம் பெருகும். இதனால், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக கட்டிடங்கள், தொழிற்சாலை வளாகங்கள் ஆகியவை அதிக அளவில் உருவாகும். பெங்களூருவின் ரியல் எஸ்டேட் துறை எதிர்காலத்தில் பல மடங்கு மதிப்பை அடையும் என்பது உறுதியாகக் கூறப்படுகிறது.