அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் இந்த ஆண்டில் 200 கோடி வசூலை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே ஆண்டில் வெளியான மூன்று மலையாள படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்து அந்த வசூலை முந்தியுள்ளன. இதனால், தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் புதிய சவால்களை சந்தித்து வருகிறது.

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் படம் ரூ.265 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல் மோகன்லால், ஷோபனா நடித்த தொடரும் திரைப்படம் 250 கோடி வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா சாப்டர் 1 வெறும் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி 250 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதனால், தமிழ் சினிமா கதைகளிலும் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சம்பளத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரமான படங்களை குறைந்த செலவில் கொடுத்தாலே பெரிய வெற்றிகளை எட்ட முடியும் என்பது மலையாள சினிமாவின் உதாரணமாக உள்ளது.
வரும் அக்டோபரில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1 படம், ரஜினிகாந்தின் கூலி பட வசூலைக் கூட முறியடிக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டுக்குள் தமிழ் சினிமா மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் கம்பேக் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் நிலவுகிறது.