சென்னை: கமல், அமிதாப் பச்சன், பிரபாஸ் ஆகியோர் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகி உலகளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பின்னணி, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கல்கி 2 தொடர்பாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதலில் கல்கி 2898 ஏடி படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருந்த நடிகை தீபிகா படுகோன், இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் வெளியிட்ட தள பதிவில், மீண்டும் அவரை ஒரே அணியாக இணைக்க இயலவில்லை என்றும், மிக கவனமாக பரிசீலனை செய்த பிறகு இந்த முடிவை எடுத்தோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் தீபிகா நடித்த கதாபாத்திரம் “சுமதி” உலகநாயகன் கமல் ஹாசன் வில்லன் பாத்திரத்தில் இருந்த காட்சிகளுடன் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இரண்டாம் பாகத்தில் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்தது, இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் மற்றும் வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் பரவியுள்ளது.
தீபிகா சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்திலிருந்து விலகிய பின்னர், தற்போது கல்கி 2 லிருந்து நீக்கப்பட்டதால், இதற்கு பிரபாஸ் தொடர்புடையதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கல்கி 2 படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்றும், ஜனவரி மாதம் வரை நடைபெற வாய்ப்புள்ளது. இதன் பிறகு கமல் KH237 படத்தில் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.