புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மொத்த செயல்பாட்டு பிளாசாக்களில், குறைந்தது ஐந்து சுங்கச்சாவடிகள் கடந்த நிதியாண்டில் சராசரியாக தினசரி ரூ. 1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன என்று பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இந்த சுங்கச்சாவடிகள் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொன்றும் உள்ளன.
இதுகுறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செயல்படும் 5 சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வசூலிக்கப்படுகிறது.
2023-24 நிதியாண்டில் குஜராத் மாநிலத்தில் உள்ள பரதானா சுங்கச்சாவடியில் ரூ. 475.65 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2,043 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே மிக உயர்ந்த சுங்கச்சாவடி ஆகும்.
2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், ஷாஜகான்பூர் சுங்கச்சாவடி கடந்த நிதியாண்டில் ரூ.429.65 கோடி வசூலித்துள்ளது. 3வது இடத்தில் உள்ள அரியானா மாநிலம், கரோண்டா சுங்கச்சாவடி கடந்த நிதியாண்டில் ரூ.4,026 கோடி வசூலித்துள்ளது. 4வது இடத்தில் உள்ள மேற்கு வங்க மாநிலமான ஜல்துலகோரி சுங்கச்சாவடி கடந்த நிதியாண்டில் ரூ.364.23 கோடி வசூலித்துள்ளது.
5வது இடத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலமான பரஜோர் சுங்கச்சாவடி கடந்த நிதியாண்டில் ரூ.364 கோடி வசூலித்துள்ளது. நாடு முழுவதும் 2019-20 மற்றும் 2023-24 ஆண்டுகளில், சுங்கச்சாவடிகளில் ரூ.1.94 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிக சுங்கச்சாவடிகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும் 142 சுங்கச்சாவடிகள் உள்ளன.
உத்தரபிரதேசம் 102 சாவடிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 457 சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டுள்ளன. அவ்வாறு கூறுகிறது.