டொமெஸ்டிக் ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா தனது சமீபத்திய 5G ஸ்மார்ட்போனான லாவா பிளேஸ் X 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 120Hz கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. எனினும் இது மீடியாடெக் டைமென்சிட்டி 7050 SoC உடன் வரும் என்று முன்பு வதந்தி பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. லாவா பிளேஸ் X 5G ஆனது 64 மெகாபிக்சல் மெயின் சென்சார் மூலம் டூயல் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டு வருகிறது.
இந்தியாவில் லாவா பிளேஸ் X 5G ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.14,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 128ஜிபி சேமிப்புடன் கூடிய 6ஜிபி மற்றும் 8ஜிபி வகை மாடலின் விலை ரூ.16,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டார்லைட் பர்பில் மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது. மேலும், அனைத்து வகைகளுக்கும் அறிமுகச் சலுகையாக ரூ.1,000 தள்ளுபடியை லாவா நிறுவனம் வழங்குகிறது.
லாவா பிளேஸ் X 5G ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ) ஆதரவைக் கொண்ட ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது. இதில் 120Hz ரெஃபிரேஷ் ரேட், 394ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67-இன்ச் முழு-எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்கள்) கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஆன் போர்டு ஸ்டோரேஜ் கொண்ட மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் சோனி பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா யூனிட் கொண்டுள்ளது. மேலும், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக ஃபிராண்ட் ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் ஃபிராண்ட் கேமரா கொண்டுள்ளது. மேலும், இதில் ப்ளூடூத், Wi-Fi, GPS, OTG, 5G மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அக்சிலரோமீட்டர், அம்பிஎண்ட் லைட், கைரோஸ்கோப், மேக்னெட்டோமீட்டர் மற்றும் ப்ரோக்ஸிமிட்டி உள்ளிட்ட சென்சார்களுடன் IP52-மதிப்பீட்டுடன் வருகிறது. லாவா பிளேஸ் X 5G ஸ்மார்ட்போன் ஆனது, இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,000mAh Li-பாலிமர் பேட்டரியைக் கொண்டுள்ளது.