வாஷிங்டன்: இந்தியா–பாகிஸ்தான் மோதலை நான் முடித்தேன், எனவே எனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் ஹெச்1பி விசா கட்டண உயர்வால் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய அவர், கல்வி நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இதையே முக்கியமாக பேசினார்.

உலக நாடுகள் இடையேயான ஏழு போர்களை நிறுத்தியவன் தான் என்று தன்னைப் பற்றியே புகழ்ந்து பேசிய டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் மோதலும் தன் முயற்சியால்தான் தீர்த்துவிட்டதாகக் கூறினார். ஆனால், இந்தியா மூன்றாம் நாட்டின் தலையீட்டை ஏற்கவில்லை என்று முன்பே தெளிவுபடுத்தி இருந்தது.
டிரம்ப் தனது உரையில், “நான் சமாதான உடன்படிக்கைகள் ஏற்படுத்தியவனர். இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, அர்மீனியா, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளின் போர்களை நிறுத்தினேன். இந்த உலகில் யாரும் என்னைப் போல அமைதிக்காக உழைக்கவில்லை” என்று வலியுறுத்தினார். மேலும், “நான் ஏழு போர்களை நிறுத்தியிருக்கிறேன், அதற்கும் நோபல் பரிசு தரவில்லை. ஆனால், ரஷ்யா–உக்ரைன் போர் நிறுத்தினால் பரிசு தருவோம் என்கிறார்கள். இது நீதி தானா?” என்று கேள்வி எழுப்பினார்.
அவரின் இந்த உரை அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும், உலக அளவிலும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. நோபல் பரிசு மீதான அவரின் மீண்டும் மீண்டும் வற்புறுத்தல், பலருக்கு அரசியல் நாடகமாகவே தெரிகிறது.