இந்திய ரயில்வே தற்போது 13,169 பயணிகள் ரயில்களை இயக்கி வருகிறது. நாடு முழுவதும் 7,325 ரயில் நிலையங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் சில முக்கிய நிலையங்கள் ஆண்டுதோறும் ரூ.500 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுகின்றன. அவை தரம் ஒன்று நிலையங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதிக வருவாயை ஈட்டும் ரயில் நிலையங்களில் முதலிடம் பெற்றது புது டெல்லி நிலையம் ஆகும். இந்த நிலையம் ரூ.3,337 கோடி வருவாயுடன் முன்னிலையில் உள்ளது. அடுத்ததாக ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டிய சென்னை சென்ட்ரல், ரூ.1,276 கோடி வருவாயுடன் ஹைதராபாத் மற்றும் ஹவுரா, மேலும் ரூ.1,227 கோடி வருவாயுடன் ஹஸ்ரத் நிஜாமுதீன் இடம்பிடித்துள்ளன.
இதன் பின் வருவாயில் முன்னிலை வகிக்கும் நிலையங்களாக மும்பை சிஎஸ்டி, லோக்மான்ய திலக் டெர்மினஸ், சூரத், அகமதாபாத், ஆனந்த் விஹார், பாட்னா, புனே, விஜயவாடா, ஜெய்ப்பூர், நாக்பூர், தானே, ஆக்ரா கான்ட், அம்பாலா கான்ட், பெங்களூரு, பரேலி, கல்யாண் ஆகியவை அடங்குகின்றன.
இந்த நிலையங்கள் லட்சக்கணக்கான பயணிகளுக்கு போக்குவரத்து மையமாக மட்டுமல்லாமல், இந்திய ரயில்வேயின் நிதி வலிமையை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொடர்ந்து நடைபெறும் நவீனமயமாக்கல் முயற்சிகள் மூலம், இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக திகழ்கிறது.