சென்னை: பெண்கள் உங்களைப் பற்றி பேசுவதில்லை என்று கவலைப்படுகிறீர்களா? அவர்களிடம் நெருங்குவதற்கு ஆசையிருந்தும், பயத்தால் விலகி நிற்கிறீர்களா? அப்படியெனில் இந்த டிப்ஸ் உங்களுக்கு நிச்சயமாக உதவும்.
ஏனெனில் இப்போது பெண்களிடம் நெருங்கி பழகுவதற்கும், அவர்கள் உங்களை பற்றி பேசுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளோம். நிச்சயம் இவை பெண்களிடம் நெருங்கி பழகுவதற்கான நிலைக்கு எடுத்துச் செல்லும். மேலும் பெண்களுடன் வெளியே செல்ல, நீங்கள் அவர்களிடம் கெஞ்சுவது போய், உங்களுடன் வருவதற்கு அவர்கள் போட்டியிடும் நிலைமையும் வந்து விடும்.
சரியான ஆடைகளை தேர்வு செய்வதுடன், அவை தற்கால மார்டன் ஆடைகளாக இருக்குமாறு தேர்வு செய்யுங்கள். மேலும் தேர்வு செய்யும் ஆடைகளின் நிறம் முடி, கண்கள் மற்றும் சருமத்திற்கு பொருந்தக் கூடியதாக இருக்கட்டும்.
ஒரு ஹார்ட்கோர் பாடி பில்டரின் தோற்றத்தை பெறாவிட்டாலும், நல்ல அழகான தோற்றத்தோடு இருந்தால் தான் பெண்களைக் கவர முடியும்.ஆகவே உடலில் உள்ள திசுக்களுக்கு சக்தி கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்து மெருகேற்றினால், பெண்களை கவர்ந்திழுக்கலாம்.
ஸ்டைலான ஹேர் கட், அழகான ஒழுங்குபெற்ற நகம், ஷேவ்விங் செய்தல், முடியை திருத்தம் செய்தல் போன்றவை மிகவும் முக்கியம். காதுகளிலோ, மூக்கிலோ முடி இருந்தால், அவற்றை நீக்கி விடுவதில் கவனம் கொள்ளுங்கள்.
டியோடரண்டால் முழுவதும் குளிக்காமல், மெல்லியதாக மனம் வீசும் படியாக ஸ்ப்ரே அடித்துக் கொள்ளுங்கள். அதுவும் நன்றாக குளித்து புத்துணர்வுடன் இருங்கள். எவ்வளவு மார்டனாக ஆடை உடுத்தினாலும், ஸ்டைலாக காட்சியளித்தாலும், உங்கள் மீது துர்நாற்றம் வீசினால் கண்டிப்பாக தனிமை தான் மிஞ்சும்.
நேராக நின்றால் தான் தன்னம்பிக்கை தெரியும். ஆனால் கொஞ்சம் வளைந்தபடி நின்றால், தன்னம்பிக்கை குறைவும், பாதுகாப்பின்மையும் நன்கு வெளியே தெரியும். ஆகவே நேராக நிற்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது உங்களை நீங்களே ரசிக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவே பெண்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வதற்கும் உதவும்.