‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் பவன் கல்யாணின் வரவிருக்கும் ‘ஓஜி’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த டிவி.வி.தனையாவின் மகன் கல்யாண் தாசரி, இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆர்.கே.டி ஸ்டுடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இதைத் தயாரிக்கிறார்.
இந்த தெலுங்கு படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடவுள்ளனர். ‘அனுமன்’ படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா கதை எழுதியுள்ளார். பிரசாந்த் வர்மாவின் சினிமா பிரபஞ்சத்தின் அடுத்த அத்தியாயமாக இருக்கும் ஷரன் கோப்பிஷெட்டி இதை இயக்குகிறார்.

சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ சரண் பகலா இசையமைக்கிறார். “நம்பிக்கைக்கும் இருளுக்கும் இடையிலான ஒரு பெரிய போராட்டத்தில் அதீரா தனது மின்னல் சக்திகளை எவ்வாறு வெளிப்படுத்தி தர்மத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
இந்தப் படம் இந்திய காவியங்களின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதை நவீனத்துவத்துடன் இணைக்கிறது. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது,” என்று குழுவினர் தெரிவித்தனர்.