ஜெனீவா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட “பாராசிட்டமால் மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுத்தும்” என்ற கூற்றை உலக சுகாதார நிறுவனம் முற்றிலும் நிராகரித்துள்ளது. பாராசிட்டமால் அல்லது அசிட்டாமினோபென் உலகெங்கிலும் வலி நிவர்த்தி மற்றும் காய்ச்சலை குறைக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் கூறியது: கர்ப்பிணிகள் தேவைப்பட்டால், மருத்துவ ரீதியாக பாராசிட்டமால் பயன்படுத்தலாம். இதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் என்ற எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
டிரம்பின் கருத்துக்கு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரின் கூற்று பொறுப்பற்றது என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. WHO மற்றும் ஐரோப்பிய மருத்துவ நிறுவனங்கள், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றும், ஆட்டிசத்துடன் தொடர்பு இல்லையென்றும் உறுதிசெய்துள்ளன.
இதனால் பாராசிட்டமால் குறித்து தவறான தகவல்களை பரப்புவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவ சமூகமும் பொதுமக்களும் கவனித்துக் கொள்ள வேண்டும்.