சென்னை: இந்தியாவின் முன்னணி ஜீ5 ஓடிடி தளம் தனது புதிய தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த வெப் தொடரில், கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதை சுருக்கம்
வேடுவன் கதை சூரஜ் (கண்ணா ரவி) சுற்றியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் நடிகராக வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் அருண் என்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு, சூரஜின் சவாலான பணிகள், கடினமான முடிவுகள் மற்றும் அருணின் ரகசியங்களை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் கடமை, காதல், நெறிமுறைகள் மூன்று மோதும் பரபரப்பான திரில்லர் உருவாகிறது.
நடிகர் மற்றும் இயக்குநர் கருத்துக்கள்
கண்ணா ரவி கூறியதாவது:
“வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு. ரீல் மற்றும் ரியல் கலந்த ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணம். இது ஒரு நடிகனின் போராட்டத்தை மட்டுமல்ல, அருணின் சவால்கள் மற்றும் தியாகங்களை காண்பிக்கும் கதை. கடமைக்கும், காதலுக்கும் மக்கள் எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்பதைக் கூறுகிறது.”
இயக்குநர் பவன்:
“வேடுவன் என் கண்ணோட்டத்தில் காதல், கடமை, துரோகம் போன்ற மனித உணர்வுகளின் ஆழத்தை கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக வடிவமைக்கப்பட்டு, அவர்களின் முடிவுகளுக்கு பெரிய விலை உண்டு. பார்வையாளர்கள் தங்களும் இப்படியான சூழலில் என்ன செய்வார்கள் என்பதை சிந்திக்கச் செய்யும் கதை இது.”
ZEE5 தமிழ் & மலையாளம் பிஸினஸ் ஹெட் லாய்ட் C சேவியர்:
“வேடுவன் மூலம் வேர்களோடு பிணைந்த, துணிச்சலான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளை தமிழ் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல மகிழ்ச்சி. வலுவான நடிகர்கள், உணர்ச்சி மிக்க கதை மற்றும் அருமையான விஷுவல் மூன்று இணைந்து பிரத்தியேக அனுபவத்தை தரும்.”