சென்னை: யூடியூபர் இர்ஃபான் தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அவருக்கு சென்னை போக்குவரத்து போலீசார் ரூ.1500 அபராதம் விதித்தனர். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் பிரசாந்த், ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ போக்குவரத்து போலீஸாரின் கவனத்திற்கு வந்தபோது, நடிகர் பிரசாந்த் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொகுப்பாளினிக்கு தலா ரூ.1,000, மொத்தம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் யூடியூபர் இர்ஃபான் ஹெல்மெட் அணியாமல் சூப்பர் பைக் ஓட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்த ஒருவர், ‘டூ வீலர் விதிகள் சாமானியர்களுக்கு மட்டும்தானா.. இர்பான் பிரபல யூடியூபர், விதிகள் இருக்கும் போது நடவடிக்கை இல்லையா? இப்படி மீறினார்களா? உடனடியாக போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக இர்பானுக்கு ரூ.1000, முறையற்ற நம்பர் பிளேட் வைத்திருந்ததற்காக ரூ.500 என மொத்தம் ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.
யூடியூபர் இர்பானுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.