கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 2 குழந்தைகளுடன் தாயும் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி இவரது மனைவி ஹேமலதா (வயது 30). அவர்களின் குழந்தைகள் சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4). ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.
பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஹேமலதா, குழந்தைகள் சாய்லெட்சனா,சாய்ஜீவா ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.