வருகிற அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு மொத்தம் 21 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் அடங்கும். இதனால் பொதுமக்கள், வங்கி சார்ந்த பணிகளை முன்கூட்டியே திட்டமிட முடியும். அக்டோபர் மாதத்தின் முக்கிய விடுமுறைகள் மாநிலங்களின் உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 1ஆம் தேதி மகாநவமி, தசரா, விஜயதசமி மற்றும் துர்கா பூஜை காரணமாக திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், கேரளா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும். அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் தசரா மற்றும் காந்தி ஜெயந்தி காரணமாக வங்கிகள் மூடப்பட்டு, அக்டோபர் 3 மற்றும் 4ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் துர்கா பூஜை காரணமாக வங்கிகள் மூடப்படும்.
மற்றும் அக்டோபர் 6, 7, 10, 18, 20, 21, 22, 23, 27, 28, 31 ஆகிய நாட்களிலும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைகள் மற்றும் சிறப்பு தினங்களுக்கு ஏற்ப வங்கிகள் மூடப்படுகின்றன. இதிலும் முக்கியமாக தீபாவளி, லட்சுமி பூஜை, கார்வா சௌத், பிஹு மற்றும் சத் மஹாபர்வத்துப் போன்ற பண்டிகைகள் அடங்கும்.
வங்கிகள் மூடப்பட்ட நாட்களில் கூட ATM சேவைகள் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகள் வழக்கமானபடி செயல்படும். இதன் மூலம் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் பணியாற்றலாம். வங்கி விடுமுறை தினங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பணிகளை திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும்.