நடிகரும், இசையமைப்பாளரும், பாடகருமான பிரேம்ஜி சில மாதங்களுக்கு முன் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரேம்ஜியின் மாமியார் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதில் தொடக்கத்தில் பிரேம்ஜியின் பேட்டியை பார்த்து பெண் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.
ஆனால் அதற்குப் பிறகு இவரைப் பார்த்தால் இப்படியொரு தங்கமான புள்ளையா இருக்கிறார். பெரியவர்களை மதிப்பது பிரேம்ஜியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். மாமியார் ஷர்மிளா, “நான் வீட்டுக்கு வந்ததும், நான் எந்த வேலை செய்தாலும், என் மகள், அதை செய்மா இதை செய்மா என்று சொல்வாள் .ஆனால் பிரேம்ஜி கோபப்படுவார், “இதையெல்லாம் அவங்களை எதுக்கு செய்ய சொல்லுறன்னு கோபப்படுவார் அவர் மிகவும் விலைமதிப்பற்றவர். அவர் எனக்கு இன்னொரு மகன் என்று மாமியார் ஷர்மிளா கூறியுள்ளார்.